search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க ஜனாதிபதி"

    அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது செய்தால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. எத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தோ, யார் தாக்குதல் நடத்தியது என்பது பற்றியோ எந்தவித தகவல்களும் இல்லை. எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.

    இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஈரான் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய டிரம்ப், “ஈரானுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஏதாவது செய்தால் அது மிக மோசமான தவறு ஆகிவிடும். ஈரானின் செயல்பாடுகள் குறித்து சில விஷயங்களை கேள்விப்படுகிறேன். அவை அமெரிக்காவை பாதிக்குமானால் ஈரான் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறினார்.

    பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். #DonaldTrump #Pakistan
    வாஷிங்டன்:

    உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது.

    ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை நிறுத்தினார்.



    கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட டிரம்ப், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதி நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல், மந்திரி சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவை கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஆனால் அந்நாடு எதிரிகளுக்கு அடைக்கலம் தருகிறது. எதிரிகளை பாதுகாக்கிறது. இதனால் அந்த நாட்டுடன் நல்லுறவை கடைப்பிடிக்க முடியவில்லை.

    பாகிஸ்தானின் புதிய அரசுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். காலம் தாழ்த்தாமல் அதனை உடனே செய்ய வேண்டும்.

    அதே சமயம் பாகிஸ்தானுக்கு நிதி உதவியாக வழங்கிய வந்த 1.3 பில்லியன் டாலரை நான் நிறுத்திவிட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பேசிய டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னிடம் இருந்து தனக்கு ஒரு சிறப்பான கடிதம் கிடைத்ததாகவும், கிம் ஜாங் அன்னை விரைவில் சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.  #DonaldTrump #Pakistan 
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். #DonaldTrump #ImranKhan #Afghanistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உங்கள்(இம்ரான்கான்) பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். எனவே தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு அபோதாபாத் நகரில் அடைக்கலம் கொடுத்ததை பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு செய்த துரோகம் என்று கடந்த வாரம் டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. #DonaldTrump #ImranKhan #Afghanistan
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை இளைஞர் ஒருவர் தினமும் பூஜை செய்து வரும் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டத்தில் கோன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்சா கிருஷ்ணா (31). விவசாயியான இவர் தினந்தோறும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புகைப்படத்திற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். அவரின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, பொட்டு வைத்து ஆரத்தி எடுப்பது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்திய வம்சாவளி இளைஞர் அமெரிக்காவில் அந்நாட்டு கடற்படை அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை அறிந்ததில் இருந்து கிருஷ்ணா டிரம்பை பூஜையை செய்து வருகிறார்.

    இதைப் பார்த்தாலாவது இந்தியர்கள் என்றால் எப்படிப்பட்டவர்கள் என்பதை டிரம்ப் தெரிந்துகொள்ளட்டும் என்பதற்காக இப்படி செய்து வருவதாக புஸ்சா கிருஷ்ணா கூறியுள்ளார்.
    ×